Small Story


ஏமாந்த எம்.எல்.ஏ.
                                                     
            “டேய், நெசமாத்தான் சொல்றியாடா? அப்போ இன்னைக்கே முடிச்சுடலாமா? மவனே, பொய் ஏதாச்சும் இருந்துச்சு உன் உயிரு போயிரும் புரியுதா?” உறுமினார் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி.
             “என்னங்க இது? இந்த மாதவன் போயி பொய் சொல்வேனா? இல்லே ஐயாவுக்கு என்னைப்பத்தித் தான் தெரியாதா? இல்லே ஐயவைப்பத்தித்தான் எனக்குடத தெரியாதா? நிச்சியமாக இன்னைக்கு ராத்திரி வண்டியிலே போறாருங்க. ஐயா சொன்னபடி கச்சிதமா காரியத்தை முடிச்சிடலாமுங்க” தலையை சொறிந்தவாறு கூறினான்.
            சிறிது நேரம் கையைக் கட்டியவாறு இடமும் வலமுமாக சிவந்த முகத்திடன் உலவினால். மாதவனே அவரது உத்திரவை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.
“ஐயா, என்னமோ ரொம்பவும் யோசிக்கிறாப்பலத் தெரியுது. அதிலேயோசிக்கிறதுக்கோ அல்லது தாமதிக்கிறதுக்கோ ஒன்னுமில்லீங்க. நாம செய்யறது எல்லாம் அந்தத் தீவிரவாதக் கும்பல் மேலே தானுங்களே விழுது. என்னமோ இப்பத்தாம் புதுசா செய்யற மாதிரி பயப்படறங்களே” தூண்டினான் மாவதன்.
            “இது வரைக்கும் அப்படித்தான்டா நடந்தது. ஆனா இப்போ நிலைமை வந்து அப்படி இல்லையேடா. எல்லாமே தலைகீழாக அல்லவோ மாறிப் போயிருச்சு. சரி, பிளான் எல்லாம் கச்சிதமா இருக்குல்லே. ஜாக்கிரதை, எதிலியாவது கோட்டை சீட்டை விட்டுடாதே பஸ் பாதி தூரம் போனது வெடிக்கிற மாதிரி பன்னிடு. அதற்கு முன்னாலேயே நீ இறங்கிடு போடா போ. அவன் பண்ணின வேலை தானே இவ்வளவும். இத்தோட தீர்ந்தான்டா, அந்த ஆறுமுகம். இனி அவனாலே நமது தலைவருக்கும் எந்தத் தொல்லையும் இருக்காது. சீக்கிரமாகப் போடா” துரத்தினார் எம்.எல்.ஏ.
            உடனடியாக வெளியேறிப்போனான் மாதவன்.
            “சார்,சார்,” என்ற குரல் கேட்டு உள்ளிருந்து வந்த மூர்த்தி மாதவன் தான் வந்து விட்டானா என்ற நினைப்பில் “உன்னை எப்போவோ போகச் சொன்னனேடா, இன்னுமா போகல்லே. பஸ் போயிருமே, சீக்கிரமா முடிக்கிற லட்சனம் இது தானா” என்ற படி வந்தவர் தந்திச் சேவகன் நிற்பதைக் கண்டதும் “தந்தியா? கொண்டா என்று வாங்கிக் கொண்டவர் தந்தியப் பார்த்ததும் மனைவி வருவதாகக் கொடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்”.
            ‘ஆஹா, நமக்கெல்லாம் தலைவலி கொடுத்துக் கொண்டிந்த இந்த எதிர்கட்சித் தலைவன் இன்றோடு ஒழிந்தான்’ என்று ஏக குஷியாக பிராந்தியை விழுங்கினார்.
            ஆனால் தவிர்க்க முடியா காரணத்தினால் அந்த தலைவர் அந்த பஸ்ஸில் போகாமல் நிறுத்திக் கொண்டதையோ, அந்த குண்டு வெடித்து எதிரே வந்த மற்றோரு பஸ்ஸில் மோதியையோ அந்த பஸ்ஸில் தன்னுடைய மனைவி வந்ததையோ அதனால் ஏற்பட்ட உயிர் சேதத்தையோ அவர் அறியவில்லை.
                                                                                                                    எழுதியவர்
                                                                                                                  ரா. மகாதேவன்.

Comments

Popular Posts